Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பொறுமையே உயர்ந்த செல்வம்

பொறுமையே உயர்ந்த செல்வம்

பொறுமையே உயர்ந்த செல்வம்

பொறுமையே உயர்ந்த செல்வம்

ADDED : டிச 13, 2007 09:54 PM


Google News
Latest Tamil News
கணத்துக்கு கணம் மாறிக் கொண்டே இருக்கும் இந்த பிரபஞ்சத்தில் மாறாமல் இருக்கும் சக்தி ஒன்று உள்ளது. இந்த ஆதாரமான தெய்வசக்தியை உணர்ந்தால் தான் ஆனந்தம் பெற இயலும். எந்தப் பாதையில் சென்றாலும் இந்தத் தெய்வீக அடிப்படையை மறக்காமல் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இந்நாளைய மனிதர்கள் தனம், பதவி, அதிகாரம் போன்றவற்றில் நாட்டம் கொண்டு செயல்படுகின்றனரேயன்றி குணத்தில் நாட்டம் கொள்வதில்லை.

குணமில்லாமல் அதிகாரம் செலுத்தியோ, உயர்பதவி வகித்தோ, பணம் சம்பாதித்தோ பயனில்லை. மனிதருக்கு முக்கியமான தகுதி குணமே. இதற்கு தெய்வத்துவத்தை உணர முயல வேண்டும். இயல்பை விட்டுவிட்டால் வாழ்க்கை வீணாகிவிடும்.

நல்லதற்கும், கெட்டதற்கும் எண்ணமே காரணம். எல்லாமே சத்தியத்திலிருந்து வந்தவை. சத்தியமே தெய்வஸ்வரூபம். சத்தியமே எல்லாவற்றிற்கும் ஆதாரம். சத்தியத்தைவிட மேலான தர்மம் வேறு இல்லை. படைப்பனைத்தும் சத்தியத்தில் பிறந்து சத்தியத்திலேயே இணைகின்றன. சுத்தசத்துவமே அதன் துணை. இதில் குணத்திற்கே முக்கியத்துவம் உள்ளது.

எவ்வளவு தனவந்தராயினும் குணமே பிரதானமானது. தெய்வத்துடன் கூடிய நற்குணமே மனிதத் தன்மையை வெளிப்படுத்தக்கூடியது.

இந்தத் தெய்வீக உணர்வினைப் பற்றிப் பாரத மக்கள்தான் நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார்கள். இன்று இப்படிப்பட்ட உயர்ந்த கலாசாரத்தை மறந்துவிட்டனர். இந்த தெய்வீக உயர்வினை மறந்துவிட்டது மிகுந்த துர்பாக்கியமே.

எல்லா தனங்களையும்விட மிகவும் உயர்ந்த தனம் பொறுமையே. எல்லா விரதங்களையும்விடச் சிறந்த விரதம் சத்தியமே. தாய்மையை விடச் சிறந்த பாக்கியம் ஏதுமில்லை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us